பீஹார் மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகளை குற்றம் சாட்டியுள்ளார்.
முசாபர்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “பீஹார் மக்களின் பெருமையான சாட் பண்டிகையை நாடகம் என காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் குறிப்பிடுவது, பீஹார் மக்களுக்கு அவமானம் ஏற்படுத்தும் செயல். என்னையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர்கள் பேசியுள்ளனர். இந்த அவமரியாதையை பீஹார் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்,” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: “சாட் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், பீஹாரில் ஊழல், வன்முறை, தவறான ஆட்சி போன்றவற்றை உருவாக்கியவர்கள் தற்போது மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சி செய்கின்றனர். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தண்ணீர் மற்றும் எண்ணெய் போல இயங்க முடியாத ஒன்று. அவர்கள் ஆட்சியில் ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன; சில குடும்பங்கள் மட்டும் செழித்தன.”
“தேஜ கூட்டணி அரசு பீஹாரின் கலாசாரத்தை உலகம் முழுவதும் பரப்பவும், மாநில வளர்ச்சியை உறுதி செய்யவும் பாடுபடுகிறது. ஆனால் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் பீஹார் முன்னேற்றமடைய முடியாது,” என்று விமர்சித்தார்.

















