திருவாரூர் வெளி மாவட்டத்தில் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு

திருவாரூர் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குருவை நெல் சாகுபடி தீவிரமாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு காஞ்சிபுரம், ஆரணி, சென்னை அருகே உள்ள ரெட்ஹில்ஸ் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர் .

இதன் காரணமாக நேரடி நெல் கொள்முதல் செய்யப்படும் கிராம பகுதிகளில் அதிக விளைச்சல் நடைபெற்றதாக அரசு கணக்கு தெரிவிக்கிறது.
இதன் தொடர்ச்சியாக மழை உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளால் விவசாயிகள் கடும் இழப்பை சந்திக்கும் நேரத்தில் பயிர் காப்பீடு கிடைக்காமல் போய்விடுகிறது எனக்கூறி வெளி மாவட்ட நெல் மூட்டைகளை அனுமதிப்பது இல்லை.

இந்த நிலையில் குடவாசல் நகர் பகுதியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நேற்று இரவு சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து குடவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இன்று திண்டுக்கல் பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை விவசாயிகள் மடக்கிப் பிடித்தனர் .
குடவாசல் போலீசருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது… தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்ட நெல் மூட்டைகளை தினசரி 100 லாரிக்கு மேல் ஏற்றி வருவதால் விவசாயிகள் மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலத்தில் அறிவிக்கப்படும் பயிர் காப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சந்தித்து கேட்டபோது இனிவரும் காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் நெல் மூட்டைகளை கணக்கில் கொண்டு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளவார்கள் என தெரிவித்ததற்கு அதிகாரிகளைக் கொண்ட குழு அமைப்பதாகவும் வெளி மாவட்ட நெல் தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் .

இதன் தொடர்ச்சியாக நாங்கள் விவசாயிகள் கொண்ட குழுவை உருவாக்கி உடனடியாக இரண்டு லாரிகளை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம் என தெரிவித்தார்.

பேட்டி :சரவணன். தமிழக காவிரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் .

Exit mobile version