தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசை கண்டித்து தேனி மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாக குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக மகளிர் அணி ஏற்பாட்டில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன், பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,
“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”,
“தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன”,
“பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறி வருகிறது”
என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

















