தனது கணவரை கொலை செய்த நபர் குடும்பத்தினரோடு தலைமறைவாகிவிட்டதாக குற்றம்சாட்டி பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஶ்ரீகாந்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கூத்தியம்பேட்டையைச் சேர்ந்த பவானி (26) என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்து அளித்த மனுவில் தனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளதாகவும் தனது கணவர் சிரஞ்சீவி கடந்த 20.10.2024 ஆம் தேதி அன்று தாண்டவன்குளம் சென்று வருவதாக சென்ற நிலையில் எங்கள் பகுதியைச் சேர்ந்த கட்டப் பிள்ளை என்கிற தினேஷ் எனக்கு போன் செய்து எனது கணவர் சிரஞ்சீவியின் டூவீலர் டாஸ்மார்க் கடை அருகே நின்றதாகவும் சிரஞ்சீவியை காணவில்லை என்று டூவீலரை எனது வீட்டிற்கு எடுத்து வந்தார். தொடர்ந்து கட்ட பிள்ளை என்கிற தினேஷை அழைத்துக் கொண்டு எனது கணவரை தேடினேன் கிடைக்கவில்லை. கட்டப் பிள்ளை என்கிற தினேஷ் மண்ணியாற்றில் தேடிப் பார்ப்போம் என்று கூறி அழைத்துச் சென்றபோது அங்கு எனது கணவர் இறந்து கிடப்பது தெரிந்தது. எனது கணவருக்கும் தினேஷுக்கும் கொப்பியம் டாஸ்மாக்கில் மது அருந்திய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் ஊர்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள், என்னால்தான் சிரஞ்சீவி இறந்துவிட்டார் என்றும் தினேஷ் புலம்பி உள்ளதாகவும், தனது கணவர் சிரஞ்சீவியை கட்ட பிள்ளை என்கிற தினேஷ் கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டி பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது தினேஷ் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை

















