திருப்பத்தூரில் 4வது நாளாக இன்று வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ரஜினி நடித்து வெளியாகிய மாவீரன் திரைப்படத்தில் வரும் புரட்சி பாடலை பாடி உணர்ச்சி பொங்க போராடிய VAO
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் மாவட்ட தலைவர் அருள்மொழி வர்மன் தலைமையில் நடைபெற்றது.
கிராம உதவியாளர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலும் நில அளவர் முதல் ஆய்வாளர் வரையிலும் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையிலும் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்ற இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் உணர்ச்சியின் உச்சகட்டமாக சென்று ரஜினி நடித்து வெளியாகிய மாவீரன் திரைப்படத்திலிருந்து எழுகவே என்கிற புரட்சிப் பாடலை பாடி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி போராடிய சம்பவம் காத்திருப்பு போராட்ட களத்தில் இருந்த அனைவரின் வரவேற்பை பெற்றது.
இதே வரவேற்பு தமிழக அரசின் கவனத்திற்கும் செல்ல வேண்டும் என்பதே அனைத்து வருவாய் துறை சார்ந்த அலுவலர்களின் கோரிக்கையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
