மயிலாடுதுறையில் நடைபெற்ற 56ம்ஆண்டு ஸ்ரீராதா கல்யாண உற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர், பஜனை பாடல்களுக்கு ஆடிப்பாடி வழிபாடு செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ராதா கல்யாண கமிட்டி சார்பில், 56ம் ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மகோத்ஸவம் மயிலாடுதுறையில் 9ம் தேதி துவங்கியது 2 நாளாக நேற்று நாமசங்கீர்த்தனம், அலங்கார திவ்யநாமம், நிச்சய தாம்பூலம், உஞ்சவ்விருத்தி, துரவ சரித்திரம் உள்ளிட்ட சங்கீத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பஜனை பாடல்களை பக்திப்பரவசத்துடன் பக்தர்கள் பாடி, வழிபாடு செய்தனர். பாகவத புராணம், இசைக்கப்பட்டது. தொடர்ந்து கண்ணனின் லீலைகள் குறித்த பாகவத நாட்டிய நாடகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் ஞான குரு பாகவதர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு புகழ்பெற்ற பாகவதர்கள் பாகவத புராணங்கள் பஜனை உடன் இசைத்தனர். தொடர்ந்து ஜெயகிருஷ்ண தீட்சிதர் குழுவினரின் பாகவத நிகழ்ச்சி நடைபெற்றது.

















