மாவட்டம் மல்லமூப்பம்பட்டி அருகே சித்தனுர் காலனி பகுதியை சேர்ந்த மாணவன் தமிழரசனை காமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மாணவன் தமிழரசனை தினமும் வகுப்பறையை விட்டு வெளியே அமர செய்து விடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவனின் தாய் சித்ரா நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது உன் மகனுக்கு சரிவர படிக்க தெரியவில்லை, அதனால் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற வாய்ப்பு இல்லாத காரணத்தால், வகுப்பறியை விட்டு வெளியே அமர வைத்ததாக தலைமை ஆசிரியர் தெரிவித்ததாக தாய் சித்தரா தெரிவித்தார்.
ஆனால் மாணவனின் தாய் எங்கள் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை இந்த மாணவனாவது பத்தாவது வரை படிக்க நீங்கள் உதவி செய்திட வேண்டுமென்று கேட்டார். ஆனால் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் சேர்த்துக் கொள்ளாதது வருத்தம் அளிப்பதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்று வருகை தந்த மாணவன் மற்றும் மாணவனின் தாய் இருவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை புரிந்து இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் ஆறாம் வகுப்பு முதல் அந்த பள்ளியிலேயே தன் மகன் படித்து வருவதாகவும் தற்போது மாணவனுக்கு படிக்க தெரியவில்லை என்று நீக்கி விடுவது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.
ஆறாம் வகுப்பில் ஏழாம் வகுப்பிலே சொல்லியிருந்தால் மாற்றுப் பள்ளியில் சேர்த்து மாணவனின் படிப்பை தொடர செய்திருப்போம் தற்போது மாணவனின் கல்வியை கற்க எந்த பள்ளிக்கும் செல்ல முடியாத சூழல் உள்ளதாகவும்,
இதே பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவனின் தாய் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.