பாழடைந்த பாதாள சாக்கடை திட்டங்களால் தினம் தினம் பாதிப்படையும் திருவாரூர் பகுதி பொதுமக்கள்..
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆழித்தேர் ஓடும் நான்கு வீதிகளும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 11 வருடங்களுக்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டு திருவாரூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டமும் நடைமுறைக்கு வந்தது.
அது முதலே பாதாள சாக்கடை திட்டத்தால் திருவாரூர் பகுதி பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அவ்வப்போது பல இடங்களில் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்து ஓடுவது வழக்கமாகியுள்ளது.
இந்த நிலையில் பாதாள சாக்கடை குழிக்குள் ஏற்படும் அடைப்பு காரணமாக பல்வேறு வீடுகளில் கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கின்றன.
இந்த நிலையில் திருவாரூர் வடக்கு வீதியில் புகழ் பெற்ற வணிக நிறுவனங்கள் அருகே உள்ள பகுதியில் பாதாள சாக்கடை வெளியேற வழி இல்லாமல் சாலையில் வழிந்து ஓடுகிறது.
இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகு பாதாள சாக்கடை அடைப்பை எடுப்பதற்கு சிமென்ட் சாலையை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பெயர்த்து எடுத்து சாக்கடை அடைப்பை நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக வடக்கு வீதி பேருந்து நிலையம் அருகே துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் தினம் தினம் திருவாரூர் நகரில் ஏதேனும் ஒரு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைத்துக் கொள்வதும், அதற்காக அதிகாரிகள் வேலை செய்வதுமாக இருந்து வருகிறது. இந்த பாதாளசாக்கடை திட்டத்திற்காக பொதுமக்களிடமிருந்து ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. இருந்தும் பாதாசாக்கடை திட்டம் முழுமை அடையாததால், பொதுமக்கள் பணம் கொடுத்தும் துன்பப்படும் நிலை ஏற்படுகிறது என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேட்டி : ராஜேந்திரன் – சமூக ஆர்வலர்
