மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 56 லட்சம் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டிய விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மணனுக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து ஆரத்தி எடுத்து நன்றி தெரிவித்தனர்
விழுப்புரம் நகரப்பகுதியான ஆசாகுலம் பகுதியைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அப்பகுதியில் உள்ள குளத்தில் சுத்தம் செய்து சுற்று மதில் அமைக்க வேண்டுமென நீள்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் அவரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 56 லட்சம் ஒதுக்கீடு செய்து ஆசாகுளம் குளம் சீரமைப்பு பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தந்த எம்எல்ஏ லஷ்மணன்கு நன்றியை காணிக்கையாக செலுத்தும் வகையிலும் ஆஷாகுலம் பகுதி பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் .


















