வெண்ணாறு வடிநில மன்னார்குடி உப கோட்ட (1) எல்லைக்குட்பட்ட சட்டி ரூட்டி, கலுமங்கலம் ஏரி, பொன் னாங்கன்னி ஏரி மற்றும் கண்ணன் ஆறு வடிகால் வாய்க்கால்களில் நடந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை இய ந்திரம் மூலம் அகற்றும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோ யல் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வந்த நிலையில்.தென் மேற்கு வங்ககடலில் தற்போது உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையடுத்து, திருவா ரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள், வாய் க்கால்கள், ஏரி கள், குளங்கள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் குப்பை களை நீர்வளத் துறை அதிகாரிகள் மேற்பார்வையின் கீழ் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மழை நீர் வேகமாக வடிந்து வருகிறது. இந்த பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரியாக மதுரை நில நீர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜோயல் சதீஷ் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த நிலையில், வெண்ணாறு வடிநில மன்னார்குடி உப கோட்ட (1) எல்லை க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் கண்காணிப்பு அதிகாரி ஜோயல் சதீஷ் நேற்று ஆய்வு செய்ததோடு சட்டிரூட்டி வடிகால் வாய்கால், கலுமங்கலம் ஏரி வடிகால் வாய்க்கால், பொன்னாங்கன்னி ஏரி வடிகால் வாய்க் கால் மற்றும் கண்ணன் ஆறு வடிகால் வாய்க்கால்களில் அதிக மாக படர்ந்து உள்ள ஆகாயத்தாமரை செடி களை இயந்திரம் மூலம் அகற்றும் பணியையும் ஆய்வு செய்தார். அப்போது, கூடுதலான இயந்திரங்களை பயன்படுத்தி பணி களை விரைந்து முடிக்க அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, வெண்ணாறு வடிநில கோட்டம் தஞ்சை செயற்பொறியாளர் ஆனந்தன், மன்னார்குடி உபகோட்ட (1) உதவி செயற்பொறியாளர் பூங்கொடி,, உதவி பொறியாளர்கள் கீதா, சித்ரா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
FILE NAME : MANNARGUDI RAIN WATER VEDIKAL REVIEW NEWS.
