அரசுப் பள்ளிகளில் வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த அமைச்சர் அங்கு மரங்களில் பறவை

அரசுப் பள்ளிகளில் வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த அமைச்சர் அங்கு மரங்களில் பறவைகளின் சப்தத்தை கேட்டு அழகை ரசித்துப்படியே மாணவர்களுக்கு பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் பொதுத்தேர்வு எழுத உள்ள 17 ஆயிரம் மாணவர்களுக்கு மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற பூம்பகார் எம்எல்.ஏ ஏற்பாட்டில் வினா விடை தொகுப்பான “வெற்றி நிச்சயம்” கையேடு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் மரங்களில் பறவைகளின் சப்தத்தை கேட்டு ரசித்த அமைச்சர் பறவைகளால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் மரங்கள் வளர்ப்பதின் அவசியத்தை குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மதிப்பெண்ணை அதிகரிக்கவும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 17ஆயிரம் மாணவர்களுக்கு, பூம்புகார் எம்எல்ஏவும், திமுக மாவட்ட செயலாளரமான நிவேதாமுருகன் ஏற்பாட்டில் “வெற்றி நிச்சயம்” என்ற கையேடு வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை செம்பனார்கோவிலில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார். செம்பனார்கோவில் அரசு மகளிர் பள்ளி, சம்பந்தம் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு “வெற்றி நிச்சயம்” கையேடுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இதில் அமைச்சர் பேசும்போது பள்ளி வளாகத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களில் கிளிகள் குயில்கள் போன்ற பறவைகள் சப்தம் எழுப்பு இதை கண்டு இயற்கையோடு சப்தத்தை ரசித்தபடியே மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் வளம் நிறைந்த பூமியில் பறவைகளால் ஏற்படக்கூடிய நன்மைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் ஒவ்வொரு மாணவனும் கல்வி மட்டும் அல்லாமல் ஏதாவது ஒரு தனி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கல்வியை போன்று விளையாட்டுத்துறையை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. மாணவர்கள் பல தடைகளை தாண்டி தான் வெற்றி பெற முடியும். என்னைப் போன்றவர்கள் 25 ஆண்டு காலம் பல தடைகளை கடந்து தான் வெற்றி பெற்றுள்ளோம். எம் சி ஏ படிக்கும்போது கல்வி கட்டணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு படித்ததால்தான் எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது, தமிழக அமைச்சரவையில் இடம் பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் கல்விதான் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் இளையராஜா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version