மயிலாடுதுறையில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு தொடங்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை திரு இந்தளூர் பகுதியில் மருந்து வன்னியர்கள் சங்கத்தின் சார்பில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் முதலாம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தின் மருந்து வணிகர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. தலைவராக திருக்கடையூர் சேர்ந்த ரெங்கராஜ் தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் தலைவர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக ஆனந்தபாபு ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத்திலிருந்து ஏராளமான மருந்து வன்னியர்கள் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
















