கேரளா மாநிலம் சபரிமலைஐயப்பன் திருக்கோவிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்து திருநடை அடைக்கப்பட்டது

கேரளா மாநிலம் சபரிமலைஐயப்பன் திருக்கோவிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்து திருநடை அடைக்கப்பட்டது. பதினெட்டாம்படிவழியாக இறுதியாக இறங்கிய பந்தளம் ராஜபிரதிநிதி திருக்கோவில் சாவியை மேல்சாந்தியிடம் ஒப்படைத்து திரும்பினார்.

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி மண்டல பூஜைக்காக திருநடைதிறக்கபட்டது. தொடர்ந்து கடந்த ட மாதம் 27ஆம் தேதி மண்டல பூஜையுடன் திருநடை அடைககப்பட்டு மீண்டும் டிசம்பர் 30 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக திருநடை திறக்கபபட்டது.

இந்தநிலையில் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணங்கள் அணிவித்து கடந்த 14 ஆம் தேதி மகர ஜோதி தரிசனத்துடன் மகர விளக்கு பூஜை நடைபெற்றது.

இதையடுத்து ஆலய திருநடை இன்று காலை அடைக்கப்பட்டது. முன்னதாக பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கபட்ட திருவாபரணங்கள் பதினெட்டாம்படி வழியாக திரும்ப . மேலும் பந்தளம் அரச பிரதிதிதியான நாராயண வர்ம திருநாள் ஐயப்பசாமியை இறுதியாக தரிசனம் செய்யும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து திருநடையை அடைத்த நாராயண வர்ம திருநாள் பதினெட்டாம்படி வழியாக திருப்பி இறங்கியதுடன் ஆலய சாவியை ஆலய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரியிடம் ஒப்படைத்தார் .

மண்டல மகரவிளக்கு காலகட்டத்தில் இதுவரை 52லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Exit mobile version