திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது முன்னதாக ராஜகோபாலசுவாமி ருக்மணி , சத்யபாமா சமேதரராக வைரமுடி சேவையில் எழுந்தருளினார் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கருவரையிலிருந்து புறப்பட்ட ராஜகோபாலசுவாமி தாயார் சன்னதி . ராமர் பாத வாசல் வழியாக கடந்து சொர்க்க வாசல் என்னும் பரமபத வாசல் கதவினை யானை செங்கமலம் திறந்து வைத்தது அதன் வழியாக பின்னர் பக்தர்களின் கோவிந்தா கோஷங்கள் முழங்க சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது சொர்க்கவாசல் முன்பு நம்மாழ்வாருக்கு காட்சி கொடுத்தவுடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கடந்து கோவில் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் . இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜகோபாலசுவாமியை வழிபட்டனர் .

















