பாஜக மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான சிவராஜ் சௌஹான், “ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பே இந்தியாவில் புஷ்பக விமானம் இருந்தது” என்ற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய விண்வெளி தின நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. அனுராக் தாகூர், “விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன்” எனக் கூறியிருந்தார். அந்த கருத்து விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், தற்போது சிவராஜ் சௌஹான் பேச்சும் விவாதமாகியுள்ளது.
இந்திய அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,
“ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்குவதற்கு முன்பே, நமக்கு புஷ்பக விமானம் இருந்தது. இன்று நமக்கு உள்ள ட்ரோன்கள், ஏவுகணைகள் போன்ற தொழில்நுட்பங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் இருந்தன. மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களில் இவை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பண்டைய காலத்திலேயே உயர்ந்த நிலையில் இருந்தது” என்று தெரிவித்தார்.
அனுராக் தாகூரின் கருத்து அடங்காமல் இருக்க, சிவராஜ் சௌஹானின் இந்த பேச்சும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.