காட்டூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும், சமுத்துவ பொங்கல் விழா கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு தலைமையில் நடைபெற்றது.
இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தோன்றிய கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் காட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசு பொருட்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் சமைக்கப்பட்ட சர்க்கரை பொங்கல் கிராம பொதுமக்கள், ஊராட்சி அலுவலக ஊழியர்கள், தூய்மை காவலர்கள் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தனர்.

















