September 9, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்

by Satheesa
August 26, 2025
in Bakthi
A A
0
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 12 வது திவ்ய தேசம்.

இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
மூலஸ்தானத்தில் ஹேமரி~p புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது.

தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும், சுற்றுப்புற சுவர்களில் அழகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன. 11 நிலைகளையுடைய இது, 150 அடி உயரம் கொண்டது. இத்தலத்து தேரும் விசே~மானது. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், “ரதபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு “உத்தான சயன’ கோலத்தில் பள்ளி
கொண்டிருக்கிறார். இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார்.

அப்போது அவர், “நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!’ என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், “அப்படியே காட்சி கொடு!’ என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை “உத்தான சயனம்’ என்பர்.

திவ்ய பிரபந்தம் தந்த திருமால் பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார்.

நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை “ஓராயிரத்துள் இப்பத்தும்’ என்று சொல்லி
பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, “இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா!’ என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார்.

அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் செய்த இப்பாடல்களின் தொகுப்பே “நாலாயிர திவ்ய பிரபந்தம்’ ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, “ஆராவமுதாழ்வார்’ என்ற பெயரும் உண்டானது.

அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் : திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும்
மங்களாசாஸனம் செய்தனர்.

108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், “பாதாள சீனிவாசர் சன்னதி’ என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், மேட்டு சீனிவாசராக’ தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். பிரம்மச்சாரிகள், இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெற முடியும் என்ற வாழ்க்கை தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக உள்ளது.

திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.

பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம்

இதன் பெயராலேயே இவர், “சார்ங்கபாணி’ என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.
இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது.

நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.

இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார்.

அதாவது பெருமாளே தன்பக்தனுக்க ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க முடியாது. கருவறைக்கு முன்பாக சந்தான கிரு~;ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

Tags: kumbakonamSarangapani templesouthindian templetamilnaduThe auspicious Sarangapani temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் திமுக கவுன்சிலர் தாக்குதல் – வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கண்டனம்

Next Post

ஒரு தரப்பினருக்கு ஆதரவான உத்தரவு கோரி நிர்பந்தம் : வழக்கு விசாரணையில் இருந்து தீர்ப்பாய நீதிபதி விலகல்

Related Posts

நாகேஸ்வரர் கோவில்
Bakthi

நாகேஸ்வரர் கோவில்

September 9, 2025
சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய திருக்கோயில்
Bakthi

சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய திருக்கோயில்

September 8, 2025
சித்திரை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்
Bakthi

சித்திரை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்

September 7, 2025
பௌர்ணமியில் வரும் சந்திர கிரகணம்: கிரிவலம் செய்யலாமா? சாஸ்திரம் சொல்வது என்ன?
Bakthi

பௌர்ணமியில் வரும் சந்திர கிரகணம்: கிரிவலம் செய்யலாமா? சாஸ்திரம் சொல்வது என்ன?

September 6, 2025
Next Post
ஒரு தரப்பினருக்கு ஆதரவான உத்தரவு கோரி நிர்பந்தம் : வழக்கு விசாரணையில் இருந்து தீர்ப்பாய நீதிபதி விலகல்

ஒரு தரப்பினருக்கு ஆதரவான உத்தரவு கோரி நிர்பந்தம் : வழக்கு விசாரணையில் இருந்து தீர்ப்பாய நீதிபதி விலகல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“வீக் எண்ட் பாலிடிக்ஸ்” – விஜய்யின் சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு !

“வீக் எண்ட் பாலிடிக்ஸ்” – விஜய்யின் சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு !

September 9, 2025
கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

May 31, 2025
நானி ‘தி பாரடைஸ்’ படத்திற்காக உருவாகும் பிரம்மாண்ட செட் !

நானி ‘தி பாரடைஸ்’ படத்திற்காக உருவாகும் பிரம்மாண்ட செட் !

September 9, 2025
அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது : ஐஸ்வர்யா ராய் வழக்கு

அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது : ஐஸ்வர்யா ராய் வழக்கு

September 9, 2025
தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் : நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் : நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

0
வரலாற்று சாதனை படைத்த மாருதி சுசுகி – சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை எட்டியது!

வரலாற்று சாதனை படைத்த மாருதி சுசுகி – சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை எட்டியது!

0
நேபாளத்தில் அரசியல் பரபரப்பு : பிரதமர், அதிபர் ராஜினாமா – ராணுவம் அதிகாரம் கைப்பற்றியது !

நேபாளத்தில் அரசியல் பரபரப்பு : பிரதமர், அதிபர் ராஜினாமா – ராணுவம் அதிகாரம் கைப்பற்றியது !

0
“வீக் எண்ட் பாலிடிக்ஸ்” – விஜய்யின் சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு !

ஒரே நாளில் 3 மாவட்டங்கள் – கேரவனிலிருந்து உரையாடுவாரா விஜய் ? தவெகவினரிடையே அதிருப்தி

Loading poll ...
Coming Soon
இந்த இரண்டு திரைப்படத்தில் எது BLOCKBUSTER வெற்றி ?

Recent News

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் : நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் : நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

September 9, 2025
வரலாற்று சாதனை படைத்த மாருதி சுசுகி – சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை எட்டியது!

வரலாற்று சாதனை படைத்த மாருதி சுசுகி – சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை எட்டியது!

September 9, 2025
நேபாளத்தில் அரசியல் பரபரப்பு : பிரதமர், அதிபர் ராஜினாமா – ராணுவம் அதிகாரம் கைப்பற்றியது !

நேபாளத்தில் அரசியல் பரபரப்பு : பிரதமர், அதிபர் ராஜினாமா – ராணுவம் அதிகாரம் கைப்பற்றியது !

September 9, 2025
“வீக் எண்ட் பாலிடிக்ஸ்” – விஜய்யின் சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு !

ஒரே நாளில் 3 மாவட்டங்கள் – கேரவனிலிருந்து உரையாடுவாரா விஜய் ? தவெகவினரிடையே அதிருப்தி

September 9, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.