சீர்காழி தனியார் பள்ளியில் R.T.E மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை கட்ட வற்புறுத்தும் நிர்வாகம்

சீர்காழி தனியார் பள்ளியில் ஆர்.டி. இ மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை வரவு வைக்காமல்,இந்த ஆண்டும் பணம் கட்ட வற்புறுத்தும் பள்ளி நிர்வாகம். மேனேஜ்மென்ட் சொல்வதை தான் நாங்கள் செயல்படுத்த முடியும் அரசாங்கம் பணம் அனுப்பவில்லை என பணம் கட்ட வேண்டும் என பெற்றோர்களிடம் கராராக வாக்குவாதம் செய்யும் பள்ளி முதல்வர்

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE 2009) என்பது, இந்தியாவில் உள்ள 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் ஒரு அடிப்படை உரிமையாகும்.அருகிலுள்ள தனியார் பள்ளிகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு 25% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இதற்கான கட்டணத்தை அரசே செலுத்துகிறது.

இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆர்டி இ திட்டத்தின் கீழ் பல மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று உள்ளது. அவ்வாறு கடந்த ஆண்டு பாதரக்குடி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தனது மகளை எல் கே ஜி வகுப்பில் சேர்த்துள்ளார். அப்போது ஆர்டிஇ பணம் வந்தவுடன் கழித்து கொள்ளலாம் என கூறி பள்ளி நிர்வாகம் எல்கேஜி க்கு உரிய பணத்தை பெற்றுக் கொண்டனராம். இந்த ஆண்டு யுகேஜி சேர்க்கையின் போது கடந்த ஆண்டு ஆர்.டி.இ தொகையை கழித்துக் கொள்ளுங்கள் என கேட்டபோது அந்த தொகை வரவில்லை எனவும் இந்த ஆண்டும் பணத்தை கட்டி தான் படிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. ஆர்டி இ குறித்து முழு விவரம் தெரியாத பெற்றோர் தனது உறவினர்களுடன் சென்று பள்ளி முதல்வரிடம் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தேர்வாகும் மாணவ மாணவியரிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என அரசு தற்போது அறிவித்துள்ளது என கூறி கேட்டபோது பள்ளி முதல்வர் தங்களது மேனேஜ்மென்ட் என்ன செயல்படுத்துகிறதோ அதை தான் பின்பற்ற முடியும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றினால் பள்ளி நடத்துவது சிரமம் என பெற்றோர்களிடம் சொல்லி முதல்வர் கடுமையாக பேசியுள்ளார். இது குறித்த வீடியோவையும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசின் இது போன்ற திட்டங்களை தனியார் பள்ளிகள் செயல்படுத்துவது மெத்தனம் காட்டுவதால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் இதுபோன்று ஆர்டிஇ மாணவர்களுக்கு பலருக்கு இப்பள்ளியில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்

Exit mobile version