மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளுக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோவிலில் தைப்பூசம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் அமைந்துள்ளது அறுபடை வீடுகளுக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோவில் பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் இக்கோவில் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த பின்னர் பாவம் நீங்க திருவிடைக்கழியில் சிவனை வேண்டி முருகன் தவம் செய்த தலம் என்பதால் பாவ விமோசனம் தலமாக போற்றப்படுகிறது மேலும் சிவனை வேண்டி முருகன் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் செய்ததால் தல விருட்சமாக குரா மரம் விளங்குகிறது மேலும் கருவறையில் கிழக்கு நோக்கி முருகன் காட்சியளிக்க அவருக்கு பின்னால் சிவபெருமான் காட்சியளிப்பது சிறப்பு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது மேலும் முருகனுக்கு உகந்த ஒவ்வொரு தினத்திலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம் சிறப்பு பெற்ற இருத்தலத்தில் தைப்பூசத்தை ஒட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது அதிகாலை முதலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகன் மற்றும் அம்பாளை தரிசனம் செய்து சென்றனர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
