சென்னையில் கோயில் பூசாரி ஒருவர், 27 வயதான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றிருந்தபோது, அங்கு பூசாரியாக பணியாற்றும் அசோக் பாரதி என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், “தீய சக்திகளை அகற்ற ருத்ராட்ச மணிகள் தர வேண்டும்” என கூறி, அந்தப் பெண்மணியை வடபழனியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, அந்த இளம்பெண் மீது பூசாரி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, அவர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், பூசாரி அசோக் பாரதிக்கு எதிராக இந்திய குற்றவியல் சட்டத்தின் பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளையில், பூசாரி தரப்பில், “பெண்ணின் கணவர் தன்னை தாக்கி ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்” என கூறி, போலீசில் தனி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், இளம்பெண்ணிடம் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து அவரது கணவருக்கு தெரியவந்ததை அடுத்து, கணவர் பூசாரியை தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பூசாரி முன்கூட்டியே போலீசில் புகார் அளித்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போதைக்கு, பூசாரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து வடபழனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.