டாஸ்மாக்  காலி பாட்டில்கள் திரும்ப பெரும் திட்டத்தை புறக்கணித்து டாஸ்மார்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மார்க் கடைகளில் மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல், ஸ்கேன் செய்தல், pos போடுதல் போன்ற வேலைப்பளு அதிகமாக உள்ள சூழலில் மீண்டும் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது திட்டத்தில் பணியாளர்கள் மீது அதிகமாக பணி சுமை ஏற்படுத்துவதாகவும்.

டாஸ்மார்க் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்று வைப்பதற்கு போதிய இடை வசதி கிடையாது ஆகவே மது கூட உரிமையாளர்களுக்கும் கடைப்பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் கருத்து மோதல்கள் உருவாகி அது வன்முறையாக உருவாகும் சூழல் உருவாகிறது. இது நாளடைவில் உயிர் சேதங்கள் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.
மது பாட்டில்கள் விற்பனை மற்றும் காலி பாட்டல்களை திரும்ப பெற்று அதை பாதுகாத்து ஒப்பந்த அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது போன்ற அதிக அளவு பணி சுமைகள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இருப்பதை தடுக்கும் பொருட்டு

காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு தனி ஊழியர்கள் அல்லது தனி துறை அறிமுகப்படுத்தி காலி பாட்டல்களை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட அனைத்து டாஸ்மார்க் தொழிற்சாலைகளில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் சங்கம் சார்பில் இம்மானுவேல் ,சி ஐ டி யு சார்பில் தினேஷ், ஏ.ஐ.டி.யூ.இ சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஜோதி பொருளாளர் மால்டன் ஜினின், டாஸ்மாக் எஸ்சி எஸ்டி யூனியன் மாநில இணைச் செயலாளர் அருள் மற்றும் அனைத்து சங்கங்களை சார்ந்த ஊழியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version