திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்: மாவட்டத்திற்கு ஆட்சியரும், பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களும் புதிது என்பதால் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, தொகுதி நிலவரங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ச. கவிதா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை அடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
கும்மிடிப்பூண்டி எஸ்.விஜயகுமார், பொன்னேரி எம்.எஸ்.ரவி, திருவள்ளூர் டி. அருண்குமார், பூந்தமல்லி ஆர். பிரகாசம், ஆவடி ஆர்.ரமேஷ்குமார், அம்பத்தூர் பாலமுருகன், மாதவரம் எம்.எல்.விஜயபிரபு, திருவொற்றியூர் என்.செந்தில்குமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது மாவட்ட ஆட்சியரும் மாவட்டத்திற்கு புதிது என்பதாலும் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் தொகுதிக்கு புதிது என்பதால் பரஸ்பரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து தொகுதியில் உள்ள பிரச்சனைகளை எடுத்துச் சொன்னால் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கவிதா உறுதியளித்தார். அதேபோல் அரசின் திட்டங்களும் பொதுமக்களை சென்றடைய அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதில்
மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த்சரண் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version