திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊரகவளர்ச்சித் துறை அலுவலர்களின் நியாயமான 18 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள 1500 க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பதவிகள், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்பிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர்களை தமிழ்நாடு உறுதளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட கோருதல், ஊராட்சி செயலாளராக பணியாற்றி 1996க்கு பிறகு இளநிலை உதவியாளராக பணியற்றவர்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் 50% ஓய்வூத்திற்கு எடுத்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்க கோருதல் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வசந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் 200க்கு மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

















