தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க சார்பில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க சார்பில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்ட ஈடுபட்டவர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வட்ட தலைவர் கண்ணன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை, நில அளவைத் துறை பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்கள் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை ஏற்ற வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு 25% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ், உதவி ஆய்வாளர் வீரராகவன் மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட 50 மேற்பட்டரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதில் துணை தலைவர் பிரபாகரன், செயலாளர் செந்தில், இணைய செயலாளர் ரத்தின சபாபதி, பொருளாளர் ராஜேஷ், மாவட்ட இணை செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version