எஸ் ஐ ஆர் எதிராக போராட முடிவு எனதிருவாரூரில் தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் சிவராமன் பேட்டி
திருவாரூர் தனியார் அரங்கில் தமிழ்நாடு மக்கள் கட்சி நிறுவனர் சிவராமன் 48 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது இதில் தமிழக நீதிக்கட்சி தலைவர் வாழவந்தியார் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர் .
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலைவர் சிவராமன் இன்று அடித்தட்டு மக்களின் அரசியல் எழுச்சி நாளாக கடைபிடிக்கிறோம் எனவும் தேர்தல் ஆணையத்தின் எஸ் ஐ ஆர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழக அரசியல் கூட்டணி குறித்து கேட்டபோது விரைவில் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தின் போது அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இப்பகுதி மக்களுக்காக காவிரி பிரச்சனை ,ஹைட்ரோ கார்பன் ,மீத்தேன் , ஓஎன்ஜிசி எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம் அதற்காக பல வழக்குகளையும் சந்தித்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் பாக்யராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
















