மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை…

   தமிழகம் முழுவதும் கடந்த திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மணல் விற்பனையில் போலியான லாரி உரிமையாளர்கள் சங்கத்தை ஏற்படுத்தி பல கோடி ரூபாய் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

   லாரிகள் மூலம் மணல் விற்பனையில் ஈடுபட்டுவரும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் திருவாரூரில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.

   ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சங்கர்,

   "தமிழகத்தில் 60,000த்திற்கும் மேற்பட்ட லாரிகள் குவாரிகளில் மணலை ஏற்றி விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  இத்தகைய 60,000த்திற்கும் மேற்பட்ட லாரிகளை நம்பி ஓட்டுநர், கிளினர், லாரிகளில் மணல் ஏற்றி இறக்குபவர்கள் என 1 கோடிக்கு மேல் பல்வேறு நிலைகளில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இருந்து வருகிறது.

   ஆனால் மாவட்ட ஆட்சியரில் தொடங்கி சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நியாயமான முறையில் மணல் குவாரிகளை நடத்தாமல் பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக லாரி உரிமையாளர்கள்  எம்சான்ட், கிராவல் போன்றவற்றை அந்தந்த நிறுவனத்திடம் பணம் கொடுத்து வாங்கி லாரியில் ஏற்றி விற்பனை செய்துவருகிறோம்.

   ஆனால் மணலை பொறுத்தவரை மாவட்ட ஆட்சியரில் தொடங்கி சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் போலியான லாரி உரிமையாளர்கள் சங்கத்தை ஏற்படுத்தி அந்த சங்கத்திற்கு மணல் அல்ல பர்மிட் வழங்கி வருகின்றனர்.  உண்மையான லாரி உரிமையாளர்கள் குவாரிகளில் மணலை லாரிகளில் ஏற்றி செல்லும்போது அரசு அதிகாரிகள் எங்கள் மீது திருட்டு வழங்கு போட்டு வருகின்றனர்.  கடந்த 4 ஆண்டுகாலமாக லாரி உரிமையாளர்கள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளோம். 

   இத்தகைய ஊழல் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு ஒப்பன் டெண்டர் மூலமாக மணல் எடுக்க அனுமதி வழங்கவேண்டும் என வலியுறுத்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கர், மேலும் மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்த முன்வருமானால் இத்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்..." என்றார்.
Exit mobile version