அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜயை கட்சி தொடங்க வைத்து திமுகவுக்கு எதிராக பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது, ஆளுநருக்கும், திருவள்ளுவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சீர்மிகு திட்டத்தில் புதிய புதிய கட்டிடங்கள் எதுவும் கட்டப்படாமல் பழைய கட்டிடங்களுக்கு வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் புதியதாக ஸ்மார்ட் சிட்டிகள் எங்கும் உருவாகவில்லை.
ஸ்மார்ட் சிட்டி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றால் பிரதமரை தான் விசாரிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அது போன்ற ஸ்டிக்கர் எங்கும் ஒட்டப்படவில்லை என பதிலளித்தார்.
அதானி குழுமத்திற்கு நாடு முழுவதும் விமான நிலையங்கள் துறைமுகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ஆகையால் பாஜகவிற்கு 276 கோடி ரூபாய் நிதி அவர்கள் வழங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு விமானம் ஒன்றை வழங்கி அது விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அந்த விமானத்தை பயன்படுத்தி அவர் எங்கெல்லாமோ சென்று வருகிறார்.
மத்திய அரசினுடைய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை வருமான வரித்துறை போன்றவைகளை வைத்து விஜயை மிரட்டி உருட்டி கட்சி தொடங்க வைத்துள்ளனர். திமுகவிற்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்காகவே கட்சி தொடங்கியுள்ளார் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அவர் கேட்காமலேயே வழங்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநருக்கும் திருவள்ளுவருக்கும் தொடர்பே கிடையாது அவருக்கும் திருவள்ளூருக்கும் எந்த சம்பந்தம், தமிழ் தெரியாத ஆளுநர் இது போன்ற தேவையில்லாத நிகழ்வுகளை நடத்தி இருக்க வேண்டாம் என தெரிவித்தார்.