தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடைபெற்ற கலை விழா, தீப்பந்தங்களுடன் கரகம் ஆடிய 80 வயது மூத்த கலைஞர் நடனம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் சங்கமம் கலை விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பல்வேறு கிராமிய இசை கலைஞர்களின் நாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நையாண்டி மேளத்துடன் கரகாட்ட நிகழ்ச்சி சிலம்பாட்ட நிகழ்ச்சி, உள்ளிட்டவை நடைபெற்றன. கொளத்தூர் மகாலிங்கம் என்ற 80 வயது மூத்த கலைஞர், ஏழு அடி கம்பத்தை நெற்றியில் தாங்கி பிடித்து அதன் மேல் கரகத்தை வைத்து ஆடினார். தொடர்ந்து தீப்பந்தங்களுடன் கரகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஏராளமான ரசிகர்கள் விழாவை கண்டு ரசித்தனர்.
நேற்று இரவு நடைபெற்ற செய்தி இரவு பத்து முப்பது மணி அளவில் முடிவடைந்தது அனுப்ப மறந்து விட்டேன் மன்னிக்கவும்














