அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். தமிழக ஆளுநர் இராசேந்திர விஸ்வநாத் அர்லேகர். மாணவர்களிடம் பேச்சு.
சென்னை விஐடி 2047-ஆம் ஆண்டுக்கான சட்டவியல் NEEDHIKKALAM” 2026 அதற்கான தொடக்க விழா . கேளம்பாக்கம் அருகே உள்ள VIT கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவை
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில் தொடங்கப்பட்டது .
இரண்டாம் நாள் விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழகத்திற்கு புதிய ஆளுநராக பொறுப்பேற்று உள்ள இராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .
இந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்டம் சென்னை உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி அரசு சட்டக் கல்லூரி படிக்கம் மாணவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர் விழாவில் தமிழக ஆளுநர் இராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
பின்பு விழா மேடையில் பேசிய அவர் தமிழகத்தில் சட்டக் கல்லூரி படிக்கும் மாணவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அவர் உரையாற்றினார்.
மேலும் சட்டத்துறை நீதிபதிகள் IPS.IAS JUSTICE எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.
