தமிழகத்தில் 6 கோடி பனை விதைகளை நடும் பணியானது தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் பனை விதைகளை நடுவதற்கு தமிழக அரசு, தன்னார்வலர்கள் மற்றும் பனைமரம் காக்கும் இயக்கங்கள் மட்டுமே ஆர்வமுடன் பனைமரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் இதில் ஆர்வமாக பங்கேற்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தமிழக அரசு பனை சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பனை சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்துவதன் மூலமாக விற்பனை அதிகரிக்கும் இதனால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும் எனவே வியாபாரிகள் பனை சார்ந்த பொருட்களை விற்க ஆர்வம் காட்டுவார்கள் மேலும் புதிதாக விநியோகஸ்தர்கள், வியாபாரிகள் என பனை சார்ந்த பொருட்களை விற்பதற்கு ஆர்வம் ஆர்வம் காட்டுவார்கள் இதனால் பனை உற்பத்தியானது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்வந்து பனை மரங்களை வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள் எனவே இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பனை சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சிறந்த முறை வழிவகை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
