கிடாரங்கொண்டான் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைத்தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் அழகர், தலைவர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும், வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் பணி செய்யும் தொழிலாளர்களின் பெயர்களை உடனே வருகை பதிவேட்டில் சேர்க்க வேண்டும், 2022ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பணி முடிந்த தொழிலாளர்களுக்கு பச்சை அட்டையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Exit mobile version