தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய திமுக சார்பில் திருக்கடையூர் கடைவீதியில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ஸ்டாலின் 73ஆம் பிறந்தநாள் விழா செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமையில் கொண்டாடப்பட்டது திருக்கடையூர் பேருந்து நிலையம் எதிரே தி. மு.கவினர் பட்டாசு வெடித்து கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து புகழ்பெற்ற அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் அருகே 200 -க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
