தமிழ்நாடு உலகளவில் சுற்றுலாத்துறை சார்பில் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 இன்றும் மற்றும் 3 (2026) தேதிகளில் நடைபெறும் “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டை” இன்று தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு சுற்றுலாத்துறையில் முதலீடுகளை ஈர்க்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இரண்டு நாள் நடைபெறும் இந்த சுற்றுலா மாநாட்டில் பல்வேறு கண்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன அதற்கான பிரம்மாண்ட ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா முதலீட்டாளர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை இதில் அறிமுகப்படுத்த உள்ளது.
இன்று 11 மணி அளவில் தமிழக முதலமைச்சர் இந்த துவக்க விழாவை துவக்கி வைக்கிறார்.

















