தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முன்னாள் நடிகையும், பாஜகவில் செயலில் உள்ள அரசியல்வாதியுமான குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில துணைத் தலைவர்களாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குஷ்பு, சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், கோபால்சாமி மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்குகிறார்கள்.
மாநில அமைப்பு பொதுச்செயலாளராக கேசவவிநாயகன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பொது செயலாளர்களாக பொன்.வி. பாலகணபதி, ராம. சீனிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி மற்றும் ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், மலர்கொடி, சுமதி வெங்கடேசன், மீனாட்சி, சதீஷ்குமார், மீனாதேவ், வினோஜ் பி.செல்வம், அஸ்வத்தாமன், ஆனந்தபிரியா, பிரமிளா சம்பத், கதளி நரசங்கபெருமாள், நந்தகுமார், ரகுராமன் என்ற முரளி மற்றும் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிற முக்கிய நியமனங்கள் :
மாநில பொருளாளர் : எஸ்.ஆர். சேகர்
மாநில இணை பொருளாளர் : டாக்டர் எம். சிவசுப்பிரமணியம்
இணை அமைப்பாளர்கள்: கே.டி. ராகவன், நாச்சியப்பன்
அலுவலக செயலாளர் : சந்திரன்
சமூக ஊடக அமைப்பாளர் : பாலாஜி
தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் : மகேஷ்குமார்
ஊடக அமைப்பாளர் : ரெங்கநாயகலு என்ற ஸ்ரீரங்கா
இளைஞரணி தலைவர் : எஸ்.ஜி. சூர்யா
மகளிர் அணி தலைவர் : கவிதா ஸ்ரீகாந்த்
ஓபிசி அணி தலைவர் : வீர திருநாவுக்கரசு
எஸ்சி அணி தலைவர் : சம்பத்ராஜ்
எஸ்டி அணி தலைவர் : சுமதி
விவசாய அணி தலைவர் : நாகராஜ்
சிறுபான்மையினர் அணி தலைவர் : ஜான்சன் ஜோசப்
இந்த நியமனங்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த குஷ்புவிற்கு, பின்னர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னர், அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.