தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு பயிற்சி 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் (AC & RI) இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவிகள், தங்களின் இரண்டு மாத கால ‘கிராமப்புற அனுபவத் திட்டத்தின்’ (RAWE – Rural Agricultural Work Experience) ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

​ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாணவிகளான ஐஸ்வர்யா, புவனா, தீபிகா, டான்யா, டெபிஷா, தேவஸ்ரீ மற்றும் திவ்ய தர்ஷினி அவர்கள் ( ஒரே நாடு ஒரே சந்தை) வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் தேசிய வேளாண்மை சந்தை e NAMபற்றி விவசாயிகளிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை தேசிய அளவில் சந்தைப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவாயை பெருக்கவும், நாடெங்கிலும் உள்ள வர்த்தகர்கள் தங்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலையில் தேவைப்படும் இரகத்தை தேர்வு செய்து வாங்கும் வகையிலும் e-NAM எனும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் உதவுகிறது.

Exit mobile version