விழுப்புரம் அருகேயுள்ள தளவானூர், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தென்பெண்ணை ஆற்றில் 84 கோடி ரூபாயில் தடுப்பணை சீரமைப்பு பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது தரமானதாக கட்டப்படுமென விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள தளவானூரில் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 2021-ஆம் ஆண்டு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்டப்பட்டது, அணை திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தடுப்பணை சேதமடைந்தது. சேதமடைந்த தடுப்பணை பகுதி வெடிவைத்து முழுமையாக தகர்க்கப்பட்ட நிலையில், புதிய தடுப்பணை கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேதமடைந்த பகுதியில் புதிய தடுப்பணை கட்டி, அணையை புனரமைக்கவும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் லட்சுமணன் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட தளவானூர் அணைக்கட்டு புனரமைப்பு பணி இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் துவக்க பட்டுள்ளதாகவும்,84 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு சீரமைக்கப்பட உள்ளதாகவும், கடந்த அதிமுக ஆட்சியில் அணைக்கட்டு கட்டப்பட்ட ஒரே மாதத்தில் பழுதடைந்து தளவானூர் ஊருக்குள் வெள்ளம் புகுந்து சேதமடைந்தது. அதிமுக ஆட்சியில் தரமற்ற அணைக்கட்டு கட்டப்பட்டதால் ஊருக்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது 84 கோடி ஒதுக்கப்பட்டு இரு கரைகளிலும் 600 சதுர மீட்டருக்கு தடுப்பு சுவர் அமைக்கப்படவுள்ளதாக கூறினார். ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் தளவானூர் ஆணைக்கட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.
பேட்டி – லட்சுமணன் (விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்)
