மன்னார்குடி நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் சுசுகி எர்டிகா கார் எரிந்து சேதம் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதி ஆஞ்சநேயர் கோவில் வீதியில் இன்று காலை தெருவை சுத்தம் செய்து வந்த நகராட்சி ஊழியர்கள் தெருவின் மத்திய பகுதியில் வேலி ஓரமாக குப்பைகளை தீயிட்டு கொளுத்தி வருவது வழக்கமாக கொண்டுள்ளனர் . தெருவாசிகள் குப்பைகளை இந்த பகுதியில் கொளுத்தாதீர்கள் என பலமுறை கூறியும் அலட்சியம் செய்து வந்துள்ளனர் . இன்றும் அதேபோல் குப்பைகளை கொளுத்தி தீயிட்டுள்ளனர் . தீ அணைந்து விட்டது என பூக்கடை நடத்தி வரும் பெருமாள் என்பவர் தனது சுசுகி எர்டிகா கரை தனது வீட்டின் அருகே உள்ள வேலி ஓரமாக நிறுத்தியுள்ளார் . தீயானது அணையாமல் அருகில் இருந்த காரின் டயர் பகுதி மற்றும் பெட்ரோல் டேகில் பற்றி எரிய தொடங்கியது . உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் மளமளவென்று எரிய தொடங்கிய தீயை அணைத்து நெருப்பை கட்டுக்குள் வைத்து அனைத்தனர் .தகவல் தெருந்து அப்பகுதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தீபற்றியதற்காண காரணங்களை கேட்டறிந்து பாதிக்க பட்டவருக்கு ஆறுதல் கூறியார் . தீப்பற்றியதில் காரின் டயர் மற்றும் பெட்ரோல் டேங் பகுதி எரிந்து சேதமானது . சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

















