திருவாரூர் மாவட்டம், வடுவூர் அருகே மூவர்கோட்டை பகுதியில் உள்ள பழஞ்சேரி மேடு கிராமத்தில் வசித்து வருபவர் ஜவகர்.
இவரது மனைவி சுதா (36) திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இறந்த நிலையில் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்..சுதா இருசக்கர வாகனம் மூலம் அம்மாபேட்டை சென்று அங்கிருந்து பேருந்து மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்கு செல்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை வழக்கம் போல வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் அம்மாபேட்டைக்கு சென்று கொண்டிருந்த செவிலியர் சுதாவை.. பழஞ்சேரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வழி மறைத்து சுதா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது அதனை சுதா தடுக்கவே ஆத்திரமடைந்த சுரேஷ் தான் வைத்திருந்த அறிவாளால் தலை, நெற்றி, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுதாவை வெட்டிவிட்டு செயினையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து சுரேஷ் தப்பியுள்ளார்.
அவ்வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செவிலியர் சுதாவை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது செவிலியர் சுதா சிகிச்சை பெற்று வரும் நிலையில்..
இது தொடர்பாக வடுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி சுரேஷை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் மூவர் கோட்டை பகுதி பழஞ்சேரிமேடு சேகர் என்பவரின் மகன் சுரேஷ் என்பவரை கைது
