மயிலாடுதுறை மாவட்டத்தில் மேல்நிலை 2-ம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுத ஆர்வமுடன் சென்ற மாணவ மாணவிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வு எழுத ஆர்வமுடன் சென்ற மாணவ மாணவிகள் :-

மயிலாடுதுறை மாவட்டம் மார்ச்- ஏப்ரல் 2026 மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத் தேர்வுகள் 02.03.2026 முதல் 26.03.2026 வரை நடைபெறவுள்ளது. மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் மேல் நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 41 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. அரசு அரசு உதவி பெறும் நகராட்சி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் 4868 மாணவர்களும் 5617 மாணவிகளும், மாற்றுத்திறனாளிகள் சலுகைக் கோரும் மாணவ, மாணவிகள் 102 ஆக மொத்தம் 10587 மாணவ ,மாணவிகள் அரசு பொதுத் தேர்வுகள் எழுத உள்ளார்கள்.
இத்தேர்விற்கு வினாத்தாட்கள்.மற்றும் கட்டுகள் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் மற்றும் இரவுக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்கள்
மயிலாடுதுறை மாவட்ட அளவிலான மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது அரசு பொதுத் தேர்வு பாதுகாப்பான முறையில் நடைபெற அனைத்து முன் ஆயத்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக மாவட்ட பொதுத் தேர்வு கண்காணிப்பு அதிகாரி மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் முதன்மைக்
கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் முன்னிலையில் முன் ஆயத்தக்கூட்ட தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் ,துறை அலுவலர்கள் மற்றும் தேர்வு பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் அரசு பொதுத் தேர்வுகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமையாசியர்கள் , மாணவர்கள் அரசுப் பொதுத் தேர்வினை எந்த விதமான ஒழுங்கீன செயல்பாடுகள் இன்றியும் , அச்சமின்றியும் தேர்வு எழுத மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார். மயிலாடுதுறை அரசியல் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு எழுதத் துவங்கினார்கள்.

Exit mobile version