திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் மூலம் 8 துறையின் கீழ் 1200 பயனாளிகளுக்கு சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சி கே சி ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் நடைபெற்ற 209 முகாம்களில் தகுதி பெற்ற பயனாளிகளுக்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் புதிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேரடி காணொளி காட்சி வாயிலாக நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து திருப்பத்தூரில் நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சமூக பாதுகாப்பு திட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தொழிலாளர் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 8 துறைகளின் கீழ் உதவித்தொகை வழங்குவது வீட்டுமனை பட்டா வழங்குவது புதிய குடும்ப அட்டை வழங்குவது இலவச சலவை பெட்டி தனிப்பட்டா உள்ளிட்ட உதவிகளில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பயன் பெறும் 1200 பயனாளிகளுக்கு 2 கோடியே 91, லட்சத்துக்கு 96 ஆயிரத்து 250 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய குழு தலைவர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
