மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்:- மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் முகாமை தொடக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர். ஒரே இடத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதயம், நுரையீரல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தேவைப்படுவோர்க்கு ஈ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனைகளும், பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இந்த முகாமில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம் எல் ஏ ராஜகுமார் பொதுமக்களிடம் முகாம் குறித்த கருத்துகளை கேட்டரிந்தனர். முகாமில், பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பானுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
