தற்போது இருக்கிற அரசியல் கட்சிகளிலேயே கொள்கை ரீதியாக இருப்பவர் ஸ்டாலின் மட்டும்தான் அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என திருவாரூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி..திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அலகிரி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது.திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் இருக்கிற தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு தரப்பு சொல்கிறது. நூறு ஆண்டுகளாக அங்கே தீபம் ஏற்றவில்லை. கோவிலுடைய வேறு ஒரு இடத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. அதுதான் காலம்காலமாக இருக்கிற பழக்கம். ஆனால் அந்த பழக்கத்தை மாற்றுவதற்கு ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள்.சென்றாண்டு சொல்லாதவர்கள் இந்த ஆண்டு ஏன் சொல்லுகிறார்கள் என்றால், இந்த ஆண்டுதான் தேர்தல் வருகிறது. அதனால் தான் இந்த ஆண்டு அவர்கள் சொல்கிறார்கள்.அவர்களுடைய தெய்வபக்தி, அவர்களுடைய மத உணர்வு இவ்வளவுதான். இதற்கு மேல் அவர்களிடம் தெய்வத்தைப் பற்றியும், இறையாண்மையைப் பற்றியோ, ஆன்மிகத்தைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ கேட்டால் அவர்களுக்கு எதுவும் தெரியாது.தேர்தல் நேரத்தில் ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் ஒரு பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்கிறார்கள்.தமிழக மக்கள மிகவும் அறிவார்ந்த மக்கள். இதைப்போன்று திட்டமிட்டு செய்யக் கூடிய விஷயங்களை மக்கள் புரிந்துகொள்வார்கள் அதை புறந்தள்ளுவார்கள்.அரசாங்கம் இதற்காக அச்சப்படத் தேவையில்லை. தமிழக மக்களுக்கு எல்லாம் தெரியும் அவர்கள் முருகப்பெருமானை ஏற்றுக்கொள்கிறார்கள். 99.99 சதவிகிதம் மக்கள் முருகனை ஏற்றுக் கொள்கிறார்கள் . அதில் மாற்றுக் கருத்தே கிடையாதுஆனால் இன்றைக்குப் புதிதாக தீபம் ஏற்றுவேன் என்று சொல்வது ஏன் என்று நமக்கு அவர்கள் சொன்னால் அதை பற்றி நம்முடைய அதைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்பது பற்றி கூட சொல்லலாம்.நூறு ஆண்டுகளாக செய்யாதவர்கள், சென்ற ஆண்டு கூட செய்யாதவர்கள், அந்த ஊரை சாராதவர்கள், இன்றைக்குப் புதிதாக சொல்லுகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு அரசியல் கட்சி இருக்கிறது. இதனுடைய பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசு அரசியலே செய்யல, நாங்க காங்கிரஸ் கட்சி இந்து மதத்தின் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை உடைய ஒரு அரசியல் கட்சி. நாங்களே சொல்கிறோம் முருகனுக்கு செய்ய வேண்டிய, முருகப்பெருமானுக்கு செய்ய வேண்டிய எல்லா உயர்வுகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறோம் நாங்கள் எல்லாம் தீபம் ஏற்றுகிறோம்.எங்க கட்சி அலுவலகத்திலேயே தீபம் ஏற்றும் பழக்கம் உண்டு. ஆனால் தீபம் ஏற்ற வேண்டிய நாளில், ஏற்ற வேண்டிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமே ஒழிய திடீர்னு ஒரு நாள் இந்த நாள் தான் தீபமேற்றினால் தெரியாது. எனவே அது நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. நான் அதைப்பற்றி விவாதிக்க விரும்பவில்லை. அவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்ய விரும்புகிறார்கள். இந்த ஆண்டு தேர்தல் வருகிறது என்பதற்காக அவரது முருகப்பெருமானை பிடித்து இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் செல்லாது மக்கள் விருப்பம்.ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒரு விவாத பொருளே இல்லை. எல்லா அரசியல் கட்சியும், தான் வளர வேண்டும் என்றோ அதிகாரத்தில் பங்கு வைக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு தான். நாங்க மட்டும் சொல்லல, வைகோவே சொல்லி இருக்கிறார். இன்னும் அதிகமான தொகுதிகளில் எதிர்பார்க்கிறோம் என்று கம்யூனிஸ்ட் கட்சி சொல்லி இருக்காங்க நாங்க அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறோம் என்று திருமாவளவன் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறார் அதுபோல காங்கிரசும் சொல்கிறோம், இன்னும் அதிக இடங்கள் கேட்கிறோம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறோம் .நிச்சயமாக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குவது திராவிட முன்னேற்ற கழகம். அதனுடைய முதல்வர் ஸ்டாலின். இருக்கிற அரசியல் கட்சிகளின் கொள்கை ரீதியாக இருப்பவர் ஸ்டாலின் மட்டும்தான். அவர்கள் தான் நம்முடைய முதல்-அமைச்சர் .ஆட்சி தொடர வேண்டும். அவர் முழுமையாக அளிக்க வேண்டும். அந்த கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து என்பதே கிடையாது. எங்களுக்கு அதிக இடங்கள் வேண்டும். அதிகாரத்தில் பங்கு கேட்கிறோம். அது தவறு இல்லை. அதுக்காக கூட்டணியை விட்டு நாங்கள் சென்று விடுவோம் என்ற ஒரு மாயை உருவாக்குகிறார் அது தவறு.இது வெறுமனே ஆசைக்காக சொல்லப்படுகிற வார்த்தையல்ல. காங்கிரஸ் கட்சியினுடைய உரிமை மேலும் மேலும் வளர்ந்து அதிகாரத்தில் பங்கு வகிக்க வேண்டும் அது தப்பு இல்ல நாங்கள் அதில் உறுதியாக உள்ளோம் .எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என உறுதியாக தெரிவித்தார்.காங்கிரஸ் வந்துபேரம் பேச வேண்டிய தேவை இல்லை. இது என்ன வியாபாரமா..? திமுக எங்களுடைய தோழமை கட்சி. எங்களுடைய நண்பர்கள் சிறப்பாக ஆட்சி செய்கிறார்கள். மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் குறிப்பாக ஸ்டாலினை பொறுத்தவரை மற்றவரை விட அவரிடம் அதிகமாக பேசுகிறோம். அவரை மதிக்கிறோம், விரும்புகிறோம். ஆனால் அதற்காக எங்களுடைய இயக்கம் கீழே செல்வதை நாங்கள் விரும்பவில்லை. இது மிக உறுதியான கருத்து. எங்கள் இயக்கம் கீழே போவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் இயக்கம் மேலே வர வேண்டும் அதிகாரத்தில் வர வேண்டும் நாங்கள் எல்லோரும் நண்பர்கள்.நாம் எல்லோரும் நண்பர்களே ஒருவருக்கு மட்டுமே நல்ல ஆடை இருக்கிறது மற்றவர்களுக்கு ஆடையை இல்லை என்றால் எனக்கு அதைப் போல ஒரு நல்ல ஆடை கொடு என்று சொன்னால் அது தப்பா..? அவருடைய ஆடை என வைத்துக்கொள்வோம் என்று அதற்குப் பொருள் அவர்தான் எங்கள் மூத்தவர் முன்னுரிமை மிக்கவர் அவர் தலைமையை நாங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் அரசாங்கத்தில் அதிகாரம் பங்கு வேண்டும் அதில் மாற்றுக் கருத்தே கிடையாது.தொடர்ந்து அதிமுக எல்லா வகையிலும் அவர்கள் விளிம்பு நிலைக்கு வந்து விட்டார்கள் .அவங்களால மாநில உரிமையை பேச முடியவில்லை . அமித்ஷா வந்து அதாவது என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்லுகிறார். இவங்க வந்து அண்ணா திமுக ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார்கள்திமுக தலைமையில் தான் நாங்கள் தேர்தலை சந்திப்போம் என்று நாங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்கிறோம்.ஆனால் அங்கு என் டி ஏ கூட்டணி என்று அமித்ஷா சொல்கிறார்கள் இவர்கள் தலைமை என்று அதிமுக கூறுகிறார்கள்.காமராஜர் பேத்தி நேற்று தமிழக வெற்றிக்கழத்தில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அது பற்றி எனக்கு தெரியாது என்றார்.
அரசியல் கட்சிகளிலே கொள்கை ரீதியாக இருப்பவர் ஸ்டாலின் மட்டும்தான் அவருடைய ஆட்சி தொடர K.S.அழகிரி பேட்டி
