செங்கல்பட்டு திருவடிசூலம் என்னுமிடத்தில் இயற்கை எழில் சூழ்ந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த ஸ்ரீஷேத்ரபால பைரவர் திருத்தலம். இந்த தலத்தை ஸ்ரீ பைரவர் சித்தாந்தம் சுவாமிகளால் நிறுவப்பட்டது.
அபிதான சிந்தாமணி என்று நூலில் பைரவரின் பிறப்பை பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்பு என்ற சிவன்.
ஏதோ ஒரு பொருளால் இறப்பை வெண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன் ஒரு பெண்ணை தவிர தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பவது அவனது எண்ணம். புல அட்டுழியங்களை செய்த அவன் அழியும் காவல் வந்தது.
தேவர்கள் சிவனிடம் முறையிட்டதை தொடர்ந்து சிவன் பார்வதி தேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறைபடிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். ஆந்த சுடர் ஒரு பெண்ணாக வடிவெடித்து காளம் என்ற விஷம்படிந்த அந்த பெண்ணிற்கு காளி என்று பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரனை; இருக்கும் திசைநோக்கி திரும்பினாள்.
அந்த கோபம் கனலாக வடிவெடுத்து சூரனை சுட்டெரித்தது. அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச் செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின.
அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு பைரவர் என்று பெயர் வைத்தார். தெய்வங்களுக்கு வாளை சிங்கம் உனை மயில் போன்ற வாகனங்கள் இருக்க பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. வாழ்க்கையில் வரும் துன்பத்தையும் இன்பத்தையும் இறைவனிடம் அர்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன.

ஆந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனமாக கருதப்படுகிறது. நாய்க்கு வேதஞானி என்ற பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் கோயிலைப் பூட்டி பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்றுவிடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்த அளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார்.
இத்தலத்தில் வனமாலீஸ்வரர் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி, ஸ்ரீ வைஷ்ணவி தேவி, ஸ்ரீ ருத்ர விநாயகர். வராஹிதேவி, கௌமாரிதேவி, ப்ரிங்கரதேவி, சாமுண்டிதேவி, பஞ்சமுக ஆஞ்சநேயர், இராஜராஜேஸ்வரி, சிவன், விஷ்ணு பெருமாள் வள்ளிதேவனையுடன் சுப்பிரமணியசுவாமி, நாகருத்ர ஈஸ்வரன், நவகிரகங்கள் அனைவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
நவகிரகங்களின் திசைகளுக்கு ஏற்றாற்போல் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள பாலபைரவருக்கு விளக்கு ஏற்றி வழிப்பட்டால் அனைத்து கஷ்டங்களும், துன்பங்களும் கடன் பயம் துஷ்டசக்திகள் விலகி செல்லும். பைரவருடைய பிறப்பு தினம் ஜன்ம அஷ்டமி, தேய்பிறை, வளர்பிறை அஷ்டமியில் விஷேச நாட்களாகும். வைகாசி நாட்கள் பைரவருக்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது.
 
			















