கும்பகோணத்தில் ஸ்ரீ ராமசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். தென்னகத்து அயோத்தி என்று அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலில் ராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா நாட்களில் அனுமந்த வாகனம், இந்திரவாகனம், சூரிய பிரபை வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெறும்.
இந்த நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது நம்பிக்கை. குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும் என்பது நம்பிக்கை.
திருக்கோயில் சுற்றுச்சுவரில் விநாயகரும், பூவராகசுவாமியும், உள்ளனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் சன்னதியும் இங்கு உள்ளது. ராமாயண காட்சிகள் மூலிகையால் வரையப்பட்டுள்ளது. அயோத்தி மன்னர் தசரதருக்கு நீண்ட நாட்களாக புத்திரப்பேறு இல்லை. தன் குலகுரு ஆலோசனையின் பேரில் அவர் புத்திரகாயாகம் செய்தார்.

அதன் பலனாக அவருக்கு குழந்தையாக அவதரித்தார். சுpத்திரை புனர்பூசம் நட்சத்திரம் நவமி திதி அவரது பிறந்த நாளாகும். தசரதரின் முதல் மனைவி கவுசல்யா அந்த தெய்வ மகனைப்பெற்ற புண்ணயவதி. இதையடுத்து வி~;ணுவின் கையிலுள்ள சக்கரம் பூமிக்கு வர ஆசைப்பட்டது. அது பரனை; என்ற பெயரில் ராமன் பிறந்த மறுநாள் பூசம் நட்சத்திரத்தில் இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் அவதரித்தது. அதை தன் தமிபியாக ஏற்றார்.
மூன்றாவது மனைவி சுமித்திரைக்கு ராமன் பிறந்த மூன்றாம் நாள் ஆயில்ய நட்சத்திரத்தில் அக்குழந்தை பிறந்தது. அதேநாளில் சுமித்திரையின் வயிற்றில் சத்ருக்கனன், கையிலுள்ள சங்கின் அவதாரமாக அவதரித்தார். இவர்களில் லட்சுமணன் ராமனை மிகவும் நேசித்தார். குழந்தையாக இருந்தபோது இவர் நான்காம் தொட்டியில் கிடந்தார். ராமன் முதல் தொட்டியிலில் படுத்திருந்தார்.
லட்சுமணக்குழந்தை அழுதது. எவ்வளவோ ஆறுதல்படுத்தியும் முடியவில்லை. அதன் கண்கள் ராமனின் தொட்டிலை நோக்கி திரும்பியிருந்ததைக் கண்ட வசி~;டர் ஓரே தொட்டியில் இரண்டு குழந்தைகளையும் படுக்க வைத்தார்.

ராமனை தன் மீது தூக்கிப் போட்டுக் கொண்ட அக்குழந்தை அழுகையை நிறுத்தியது. அந்த அளவுக்கு பாசமாக இருந்தனர். ராம சகோதரர்கள் ராமன் காட்டுக்கு போன வேளையில் அதற்கு காரணமாக தன் தாயை நிந்தனை செய்தவர் பரதன். மேலும் அண்ணனுக்கு பதிலாக தற்காலிக ஆட்சி நடத்திய போது, அவரது பாதுகையை சிம்மாசனத்தில் கைத்து மரியாதை செய்து வந்தார். சத்ருக்கன் தன் அண்ணன் ராமன் மீது கொண்டிருந்த அன்பிற்கு ஈடு இணை சொல்லமுடியாது.
அண்ணன் காட்டில் இருந்த போது அங்கிருந்து தன்னால் நகரமுடியாது என அந்த குட்டித்தம்பி அடம் பிடித்தார். ராமனின் ஆறுதலின் பேரிலேயே ஊர் திரும்பினான். ஒருமித்த சகோதரர்களுக்கு ஒருமித்த சகோதரிகள் மணவாட்டிகளாக அமைந்தனர். ராமனுக்கும், லட்சுமணனுக்கும் உடன் பிறந்த சகோதரிகளான சீதையும் ஊர்மிளாவும் மனைவி ஆயினர்.
புரத சத்ருக்கனருக்கு ஜனக மன்னரின் தம்பி குசத்வஜனின் புதிரதிகளான மாணவியும், சுருதகீர்த்தியும் மனைவியாயினர். பல அனுபவித்தாலும் ஆசை வார்த்தைகள் காட்டினாலும் இந்த அன்புச் சகோதர்களை யாராலும் பிரிக்க இயலவில்லை. நாளன்று தன் தம்பிகளுடனும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தனக்கு சேவை செய்ய அனுமானுடனும், காட்டில் தன்னோடு மனைவி சீதையுடனும் கொலு வீற்றிருந்தார்.

அயோத்தியில் மட்டுமே உள்ள இக்காட்சியை தென்னக மக்களும் காண வேண்டும் என தெற்கிலிருந்து நிகழ்ச்சிக்கு சென்ற மன்னர்கள் தீர்த்த நகரும் புனித இடமும் ஆன கும்பகோணத்தில் இக்காட்சியை வடிவமைத்தனர். ராமநவமி விரதம் இரண்டு விதமாக . அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு ‘கர்ப்போஸ்தவம்’ என்று பெயர்.
சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் இரண்டாவது வகை. இதற்கு ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர்.
இங்கு ராமர் திருக்கோலத்தில் அருள்பாலிப்பதால் ராம நவமி விழா கொண்டாட்டம் பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இத்திருத்தலத்தில் மூலஸ்தானத்தில் சத்ருக்னன் சாமரம் வீச, ஸ்ரீலட்சுமணன் ஸ்ரீராமனின் வில்லையும் தன்னுடைய வில்லையும் ஏந்தி இருக்க, பரதன் குடை சமர்பிக்க ஸ்ரீ அனுமன் ஒரு கையில் வீணையையும் இன்னொரு கையில் ஸ்ரீராமாயணச்சுவடியை ஏந்திய படியும் காட்சி தருகின்றனர்.
நடுவிலே பட்டாபிN~க திருக்கோலத்தில் ஸ்ரீராமரும் சீதையும் அற்புதமாக அழகு ததும்பக்காட்சி அளிக்கின்றனர். வேறு எந்த திவ்ய தேசத்திலும் காணமுடியாத சிறப்பு உடைய ஸ்ரீராமசாமி திருக்கோயிலின் வெளி மண்டபத்தில் 64க்கும் மேற்பட்ட தூ ண்கள் சிற்ப வேலைபாடுகளுடன் கலையம்சத்துடன் காட்சி அளிக்கிறது.
ராம சகோதரர்கள் நால்வரும் இங்கு அருள்பாலிக்கிறார்கள்.

மற்ற தலங்களில் கதாயுதத்துடன் காட்சிதரும் அனுமானைக் கதாயுதத்துடன் தான் எங்கும் காண முடியும். இங்கு தநத போர்க்குணத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ராமனின் காதுகுளிர வீணாகானம் மீட்டிக் கொண்டிருக்கிறார். குல்வியில் வல்லவரான அனுமன். இசையிலும் வல்லவர் என்பதை நிரூபிக்கும் வகையில் காட்சி தருகிறார்.
மற்றொரு கையில் ராமாயண காவியத்தை வைத்துள்ளார். பரதன் ராமனுக்கு குடை பிடிக்க, சத்ருக்கனன் சாமரம் வீச நிற்கும் காட்சிகள் அற்புதத்திலும் அற்புதம்.
ராமருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி மக்கள் தங்கள் நேர்த்திக் கடன் நிறைவேற்றலாம்.
ராமநவமியன்று இங்கு விN~ச பூஜைகளும் மாசிமகத்தன்று ராமனும், சீதையும் மகாமககுளத்தில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குவர்.
அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிN~கம் கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர்.
திருமண தடையுள்ள ஆண் பெண்கள் இக்காட்சியை கண்டால் தடை நீங்கி என்றும் தியாக மனப்பான்மையுள்ள வாழ்;க்கைத் துணையை பெறுவர்.