உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம்

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம் , துணை ஆட்சியர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது :-

உலகம் முழுவதும் இன்று இரத்ததான தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அறம்செய் குருதிக்கொடை குழு சார்பாக இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட துணை ஆட்சியர் கோகுல் கலந்து கொண்டார். மேலும் ஏராளமான தன்னார்வலர்கள் ஆர்வமுடன் இரத்ததானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஆட்சியர் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் இரத்ததானம் அளிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார். துணை ஆட்சியரின் இந்த செயல் பலதரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது. பின்னர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் நினைவு பரிசையும் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Exit mobile version