ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நான்காம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த வாள் நெடுங்கண்ணி அம்மன் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நான்காம் ஆண்டு குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது சீர்கொண்ட புகழ் சிறப்புலி நாயனார் மாத குருபூஜை விழாவை ஒட்டி சுவாமி அம்பாள் சிறப்பு பூஜை மற்றும் மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளித்த ஆயிரத்தில் ஒருவராக மாறி உணவு அருந்திய சிவன் சிறப்புலி நாயனார் மாணிக்கவாசகர் ஆகியோருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விபூதி அலங்காரம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர் பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு இருந்து அழைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர் சிவனடியார் பக்தர் ஒருவர் மனம் உருகி தேவாரம் பாடியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது

















