அனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஆபத்துதாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம். முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்:-
ஸ்ரீ ராமபிரானின் தூதுவரும், வாயுபுத்திரருமான ஆஞ்சநேய சுவாமிகள் மார்கழி மாத அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில், அவதரித்தார். அவரது அவதார தினமான இன்று நாடெங்கும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமத் ஜெயந்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் அமைந்துள்ள ஆபத்துதாரண ஆஞ்சநேய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, கோயிலில் அதிகாலை சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு முத்தங்கி அலங்காரமும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் செய்து மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

















