64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானையுடன் முருகனுக்கு சிறப்பு அபிஷேக சந்தன காப்பு தீபாரதனை ஏராளமான பக்தர்கள் சாமி வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர் காடு கிராமத்தில் ஒரே நேரத்தில் 64 சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காளி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு யாகம் வளர்த்து சந்தன காப்பு அபிஷேகம் தீப ஆராதனை நடைபெற்றது
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு ஸ்ரீ காழி சிற்றம்பல ஆராதனை மன்றத்தின் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் உணவு அருந்தி சென்றனர்
















