சென்னை: தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளின் மத்தியில், கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.1,200 என்ற அளவுக்கு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.91,200 என்றும், ஒரு கிராம் ரூ.11,400 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழ்நிலை, வர்த்தக மாற்றங்கள், டாலர் மதிப்பு ஆகியவற்றின் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 15) தங்கம் ஒரு கிராம் ரூ.11,550, சவரன் ரூ.92,400 என்ற விலையில் விற்பனையானது. அன்றைய தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.175 என நிர்ணயிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை என்பதால் விலையில் மாற்றமின்றி இருந்தது. அதன் பின்னர் நேற்று (நவம்பர் 17) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.11,540, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.92,320 என சரிவை கண்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.173 ஆனது.
இன்று தங்கம் விலை மேலும் சரிந்து, கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.11,400 என்ற புதிய விலையில் விற்பனை ஆகிறது. சவரன் தங்கத்துக்கு கடந்த இரண்டு நாட்களில் சேர்த்து ரூ.1,200 வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது நகை வியாபாரிகள் மற்றும் நுகர்வோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 சரிந்து தற்போது ரூ.170 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



















