பாமகவில் அன்புமணி அறிவித்த நிர்வாகிகள் எல்லோருமே கள்ள நோட்டுக்கு சமம்- தென்காசியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர் பாஸ்கரன் பரபரப்பு பேச்சு.
பாட்டாளி மக்கள் கட்சியில் சமீபத்தில் அதன் தலைவர் ராமதாசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் தென்காசியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து அக்கட்சியின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் கரூர் மாவட்ட செயலாளரும் தென் மண்டல பொறுப்பாளருமான பாஸ்கரன், மற்றும் மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய தென்மண்டல பொறுப்பாளர் பாஸ்கரன் பேசும்போது ரூபாய் நோட்டில் கவர்னர் கையெழுத்து போட்டதுதான் செல்லும் அது போல் பாமக வில் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸின் கையெழுத்து போட்டு அறிவித்த நிர்வாகிகளே செயல்படுவார்கள் அன்புமணியால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கள்ள நோட்டுக்கு சமமானவர்கள் எனவே அவர்களுடன் கட்சியினர் அனைவரும் ஒருபோதும் துணை போகக்கூடாது என்று பேசினார்கள்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியில் புதிய நிர்வாகிகள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் தொடர்ந்து பல்வேறு மாற்று கட்சியினர் நமது பாட்டாளி மக்கள் கட்சிக்கு வருகை புரிகின்றதாகவும் தெரிவித்தனர் .
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் கூறும் போது தந்தை மகன் சண்டை விரைவில் சரி செய்யப்படும் எனவும் அது அவர்களாகவே பேசி முடித்து விடுவார்கள் அது பற்றி நாம் எந்த கருத்தும் சொல்ல முடியாது எனவும் இரு வேறு அணிகள் இருந்தாலும் கடைசியில் மாம்பழம் சின்னத்திற்க்கு தான் ஓட்டு கேட்க போகிறோம் எனவும் தெரிவித்தார்.
மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் இருந்து திரளான கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.